Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

அக்டோபரில் 15.621 கோடி இ-வே பில் உருவாக்கம்

அக்டோபரில் 15.621 கோடி இ-வே பில் உருவாக்கம்

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வணிக நிறுவனங்கள் சரக்குகளின் இருப்பை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் கூடுதல் அளவில் பொருள்களை அனுப்பியுள்ளன.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் பண்டிகை காலத்தை முன்னிட்டு சரக்கு போக்குவரத்து நடவடிக்கைகள் அதிகரித்ததால், கடந்த அக்டோபரில் இ-வே பில் உருவாக்கம், இதுவரை இல்லாத அளவுக்கு 15.621 கோடியாக உயர்ந்துள்ளது.

ஜிஎஸ்டி விதிகளின்படி, சரக்கு மதிப்பு ரூ.50,000-க்கு மேல் இருக்கும்போது சரக்கு போக்குவரத்துக்கான இ-வே பில் உருவாக்கம், கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதில் சரக்கின் விவரங்கள், அனுப்புநர், பெறுநர் மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் தகவல்கள் இடம்பெறும். சரக்குகளின் நகர்வைக் கண்காணிப்பதற்கும் இது உதவுகிறது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வணிக நிறுவனங்கள் சரக்குகளின் இருப்பை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் கூடுதல் அளவில் பொருள்களை அனுப்பியுள்ளன. இதன் காரணமாக அக்டோபரில் சரக்கு போக்குவரத்து அதிகரித்து, இ-வே பில் உருவாக்கமும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

சரக்கு போக்குவரத்துக்கான இ-வே பில் உருவாக்கம் , கடந்த ஆண்டு இதே மாதத்தில் 12.686 கோடியாக இருந்த நிலையில், கடந்த அக்டோபரில் 23.14 % வளர்ச்சி கண்டு, 15.621 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய மாதமான செப்டம்பரில் பதிவான 14.153 கோடி என்ற சாதனையையும் அக்டோபர் மாத எண்ணிக்கை 10.37% தாண்டியுள்ளது.

இதனிடயே, கடந்த அக்டோபர் 8-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், சரக்கு வாகனப் போக்குவரத்தில் ஏற்படும் தாமதங்களையும், சோதனைகளால் ஏற்படும் இடையூறுகளையும் குறைக்கும் வகையில், சில முக்கிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.

இதன்படி, குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் மட்டுமே சரக்கு வாகனங்களைச் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், அதற்கும் இணை ஆணையர் அல்லது அதற்கு மேலான அதிகாரியின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், சரக்குகளை அனுப்பும் நிறுவனம் அல்லது பெறும் நிறுவனம் அமைந்துள்ள மாநிலத்தில்தான் சோதனை, சரக்குகளைத் தடுத்து நிறுத்துதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இடையில் கடந்து செல்லும் மாநிலங்களில் இதுபோன்ற அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் கட்டுப்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதேபோல், போக்குவரத்தின்போது சரக்குகள் அல்லது வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கும் அனுமதி அளிக்கக் கூடாது என்ற மாற்றமும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்தால், சரக்கு போக்குவரத்தில் ஏற்படும் தேவையற்ற தாமதங்களும் இணக்க நடைமுறைச் செலவுகளும் குறைய வாய்ப்புள்ளது.

முந்தைய செய்தி
பிரதமர் மோடி, முதல்வர் விஜய் தீபாவளி வாழ்த்து
அடுத்த செய்தி
சென்னையில் இருந்து 10 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம்

தொடர்புடைய செய்திகள்